யாழ் கோட்டையில் இராணுவ முகாம் அமைப்பதற்கு அனுமதி வழங்கிய தமிழ்த் தரப்பு !

யாழ் கோட்டையில் நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்கு தமிழத் தரப்பினரினலயே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளர் செ .கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் யாழ். கோட்டையில் இராணுவ முகாம் அமைப்பதை நிறுத்தக் கோரி இன்று பிற்பகல் யாழ். கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தம் அவர் கருத்து தெரிவிக்கையில், யாழ். கோட்டையில் வறலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராணி மாளிகையை இராணுவத்தினர் இடித்து இராணுவத்தளம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இவற்றை நிறுத்தி கோட்டை பகுதியில் இருந்து இராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தமிழ் யுவதி ஒருவர் சிகிரியாவிற்கு சுற்றுலா சென்றபோது அங்கே அவர் தெரியத்தனமாக சுவரில் ஏதோ ஒரு பெயரை எழுதிவிட்டார் என்பதற்காக அவர் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் இன்று யாழ். கோட்டையில் தொல்லியல் வறலாற்று சின்னங்களை இராணுவத்தினர் அழித்து, அங்கு நிரந்தர மூகாம் அமைத்து வருகின்றனர். இந்நிலையில், தொழிலியல் திணைக்களத்தின் தலைவர் இனவாதமாக செயற்படுகின்றார் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.