News

ரஷ்யாவில் காதலியின் மூளையை வறுத்துத் தின்று இரத்தத்தைக் குடித்த காதலன் !!

ரஷ்யாவில் தனது காதலியைக் கொன்று அவளது மூளையை வறுத்துத் தின்று அவளது இரத்தத்தை குடித்த ஒரு மனித மிருகம் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான். சீரியல் கில்லர்கள் குறித்து அதிக ஆர்வமுடைய Dmitry Luchin (21), அடிக்கடி மனிதர்களைக் கொன்று தின்னும் சடங்குகள் குறித்து வாசிப்பது வழக்கம்.

அவன் படித்தது போலவே அவனது காதலியான Olga Budunovaவை (45) கொன்று தின்றுள்ளான். அவளது தலையில் ஒயின் பாட்டில் ஒன்றினால் 25 முறை அடித்துக் கொன்றுவிட்டு அவளது மூளையை எடுத்து ஒரு துண்டை வறுத்துத் தின்றிருக்கிறான். அதன் சுவை அவனுக்கு பிடித்துப் போகவே மீதமுள்ள மூளையையும் வறுத்துத் தின்றிருக்கிறான்.

சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதாகக் கூறி Budunovaவின் வீட்டிற்கு சென்றுள்ள Dmitry அவளைக் கொன்று தின்றுள்ளான். கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top