Canada

ரொரன்ரோ சர்வதேச திரைப்பட விழா பட்டியல் வெளியீடு!!

TIFF என அறியப்படும் ரொரன்ரோ சர்வதேச திரைப்பட விழாவிற்கான தரப்படுத்தல் பட்டியலானது செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. வெனிஸ் திரைப்பட விழாவைப் போன்று இக்குறித்த கனடிய திரைப்பட விழாவும் ஹோவிவூட்டில் திரைப்பட ரசிகா்கள் மத்தியில் பரப்பரப்பாக பேசப்பட்டுவரும் விருதுகளைத் தட்டிச் செல்லக் கூடியவைகளென எதிர்வு கூறப்படும் திரைப்படங்களை ஒரு வாரத்திற்கு முன்பே தர வரிசைப்படுத்தியுள்ளது.

ரொரன்ரோ சர்வதேச திரைப்பட விழாவானது வரும் செப்டம்பர் மாதம் 6 தொடக்கம் 16 வரை நடைபெறக் காத்திருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்களின் வரிசையில், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் கதைக் களத்தினைக் கொண்ட திரைப்படம் ‘பியூட்டிபுல் போய்’ , உண்மைக் கதையொன்றைக் கருவாகக் கொண்ட திரைப்படம் ‘கென் யூ எவர் ஃபொகிவ் மீ’, அனைத்து வயதினருக்குமான திரைப்படம் ‘லைஃப் இட்செல்ஃப்’, இன உணர்வூட்டும் திரைத் தொடர் ‘த ஹேட் யூ கிவ்’ எனவொவ்வொரு தலைப்பின் கீழும் தரப்படுத்தல் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு குறிப்பிட்ட திரைப்படங்கள் முன்னிலையிலுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top