Canada

ரொறன்ரோ மாநகரசபை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: Blayne Lastman .

ரொறன்ரோ மாநகரசபை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் மேயர் மெல் லாட்மனின் மகன் Blayne Lastman தெரிவித்துள்ளார். மேஜர் வேட்பாளரராக போட்டியிடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் குடும்பத்தவருடன் கலந்துரையாடிய பின்னர் இன்று அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் குடும்பத்துடன் மேற்கொண்ட ஆலோசனையின் பின்னர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்த தேர்தலில் மேயர் ஜோன் டோரி உட்பட 21 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில் தற்போதைய மேயர் ஜோன் டோரிக்கு அடுத்த தேர்தலில் முழு ஆதரவையும் வழங்குவேன் என Blayne Lastman வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் Blayne Lastman இன் தந்தை 20 வருடங்களுக்கு முன்னர் (1998) நோர்த் யோர்க் ஒன்றாரியோவில் முதலாவது மேஜராக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top