ரொறொன்ரோவில் இவ்வருடம் கனடிய தேசிய கண்காட்சி இடம்பெறுமா?

ரொறொன்ரொ கண்காட்சி பிளேசில் முக்கிய நிகழ்வுகளில் தொழில்நுட்பம் மற்றும் மேடை நிபுணத்துவம் வழங்குபவர்கள் பணிநிறுத்தம் செய்கின்றனர். சர்வதேச கூட்டமைப்பு நாடக மேடை ஊழியர்களின் லோக்கல் 58ஐ சேர்ந்த பணியாளர்கள் புதிய ஒரு கூட்டு ஒப்பந்தம் கோரி பல மாதங்களாக இடம் பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலையில் இருந்த பணியாளர்கள் வெளியேற்றம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கனடிய தேசிய கண்காட்சி ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகி செப்பரம்பர் 3-ல் முடிவடைகின்றது. இந்நிகழ்வு முடிவடையும் வரை மறியலை இடைநிறுத்துமாறு பொருட்காட்சி பிளேஸ் கேட்டு கொண்டதாகவும் ஆனால் அவ்வாறு நடைபெற மாட்டாதென யூனியன் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பிஎம்மோ களம், குயின் எலிசபெத் தியேட்டர், கொக்கோ கோலா அரங்கு, பொருட்காட்சி மையத்தில் அமைந்துள்ள நேரடி ஆற்றல் மையம் மற்றும் தேசிய வர்த்தக மையம், லிபர்ட்டி கிரான்ட் ஆகியன பாதிக்கப்படும் இடங்களிற்குள் அடங்கும் யூனியன் தெரிவித்துள்ளது.வெள்ளிக்கிழமை பிற்பகல் மறியல் போராட்டம் ஆரம்பமாகலாம் என அறியப்படுகின்றது.