Canada

ரொறொன்ரோவில் காணமாமல் போயுள்ள 15வயது பெண்ணை தேடும் பொலிசார்

ரொறொன்ரோ பொலிசார் கடந்த நான்கு நாட்களாக காணமாமல் போயுள்ள ஈஸ்ட் யோர்க் பகுதியை சேர்ந்த 15வயது இளம் பெண்ணை தேடிவருகின்றனர். இப்பெண் செவ்வாய்கிழமை மாலை 6-மணியளவில் கொஸ்பேர்ன் மற்றும் கொக்ஸ்வெல் அவெனியுவில் கடைசியாக காணப்பட்டுள்ளார்.

நாய் ஒன்றுடன் நடக்க சென்ற இவரை காணவில்லை என இவரது தாயார் நிசாட் செய்தியாளரிடம் தெரிவித்தார். இவர் 5.3-உயரம், 160இறாத்தல்கள் எடை கொண்டவர். தலை முடிக்கு ஊதா நிற வண்ணம் பூசி வழக்கமாக கொண்டை முடிந்திருப்பார்.

கடைசியாக காணப்பட்ட போது கறுப்பு நிற பாவாடை, வெள்ளை ரி-சேர்ட் அணிந்து காதில் வளைய காதணி அணிந்து காணப்பட்டார். அத்துடன் கறுப்பு மற்றும் றோஸ் நிற முதுகுப்பை வைத்திருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொறொன்ரோ பெரும்பாகத்தில் எங்காவது இருப்பார் என நம்புவதாகவும் அப்பகுதிய சமுதாயத்தினரை தனது மகளை கண்டுபிடிக்க ஆதரவு தருமாறு நிசாட் லகானி தெரிவித்தார். இவர் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் 416-808-5400 அல்லது 416-808-5500 என்ற இலக்கத்துடன் பொலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top