ரொறொன்ரோவில் இடம்பெற்ற கொடிய வன்செயல் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டதுடன் 14-பேர்கள் வரை காயமடைந்துள்ளனர்.ரொறொன்ரோவின் கிரீக்ரவுன் பகுதியில் ஞாயிற்றுகிழமை மாலை சம்பவம் நடந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பெண். காயமடைந்தவர்களில் இளம் பெண்-8 அல்லது 9-வயது கடுமையான நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
29-வயதுடைய துப்பாக்கிதாரியும் இறந்து விட்டதாக விசேட புலன்விசாரனை பிரிவு தெரிவிக்கின்றது. தாக்குதல் வன்முறை சம்பந்தப்பட்டதாக அமையலாம் என சாத்தியக்கூறுகள் கருதுகின்றதாக அறியப்படுகின்றது.
ஞாயிற்றுகிழமை இரவு கிட்டத்தட்ட 10-மணியளவில் டன்வோத் அவெனியுவில் மனிதன் ஒருவன், கருப்பு உடையும் தொப்பியும் அணிந்த அந்த நபர் தோளில் ஒரு பை மாட்டியுள்ளான். பிளாட்பாரத்தில் நடந்து வரும் அவன் ஹோட்டல் வாசலிலிருந்து ஒரு கைத்துப்பாக்கியால் மக்கள் கூட்டம் ஒன்றை நோக்கி பல தடவைகள் துப்பாக்கி பிரயோகம் செய்ததாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கிதாரியை டன்வோர்த் மற்றும் புறோட்வியு அவெனியு அருகில் கண்டறிந்து அவ்விடத்தில் துப்பாக்கி பிரயோக பரிமாற்றம் நடந்ததாக விசேட புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. அவ்விடத்தை விட்டு ஓடிய துப்பாக்கிதாரி ஓடிவிட்டதாகவும் பின்னர் டன்வோர்த் அவெனியுவில் இறந்து கிடக்க கண்டு பிடிக்கப்பட்டுள்ளான். சந்தேக நபர் எவ்வாறு இறந்தான் என்பது தெளிவாகவில்லை.
சம்பவம் நடந்த டன்வோர்த் அவெனியு புறோட்வியு அவெனியு வரை பொலிசாரின் விசாரனைக்காக மூடப்பட்டுள்ளது. சம்பவம் பயங்கரவாத உந்துதலா என முடிவு செய்ய முடியாத நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த சிறுமி ரொறொன்ரோ நோயுற்ற சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டாள்.மூவர் சனிபுறூக் சுகாதார அறிவியல் மையத்திற்கும், நால்வர் சென்.மைக்கெல்ஸ் வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.