News

ரொறொன்ரோவில் நேர அடிப்படையிலான பரிமாற்றம் !

வெகுவிரைவில் இரண்டு மணித்தியாலங்களில் நகரில் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு மேலதிக கட்டணம் செலுத்தாமல் ஒரு வீதிகார், சுரங்க ரயில் அல்லது பேரூந்தில் திரும்பி செல்ல கூடிய பல நிறுத்தங்களில் இறங்கி ஏறும் நேர அடிப்படையிலான பரிமாற்ற நிலை ரொறொன்ரோ ரிரிசி பயணிகளிற்கு ஏற்பட உள்ளது.

புதிய நேர-அடிப்படையிலான பரிமாற்ற கட்டணம் ரிரிசி சபையினால் கடந்த நவம்பரில் அங்கீகரிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் 26ந்திகதி நடைமுறைக்கு வருகின்றது. இந்த நுழைதல் வெளியேறுதல் ஒழுங்கு பிரெஸ்ரோ அட்டை பாவனையாளர்களிற்கு மட்டுமே கிடைக்கும். இவர்கள் ஏதாவது ஒரு தரிப்பில் இறங்கி இரண்டு மணித்தியாலங்களில் கட்டணம் ஏதும் செலுத்தாமல் மீண்டும் ரிரிசியில் பயணம் செய்யலாம்.

இந்த மாற்றத்தை 2018-ன் எஞ்சிய காலப்பகுதிக்கு செயல் படுத்த 11.1மில்லியன் டொலர்களும் தொடர்ந்து வருடமொன்றிற்கு 21மில்லியன் டொலர்கள் வரையில் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகர்வு மிக வசதியானதும் மற்றும் மிகவும் மலிவானதுமாக அமையும் என ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி தெரிவித்துள்ளார்.

அட்டையில் பரிமாற்றத்தை மதிப்பிட பிரஸ்டோ வாடிக்கையாளர்கள் சுரங்க ரயில் நிலையத்தை அணுகும் போது அல்லது பேரூந்து அல்லது தெருக்காரில் ஏறும் போது மெதுவாக தட்ட வேண்டும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top