Canada

ரொறொன்ரோ கிறீக் ரவுனில் இடம்பெற்ற சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கில் பிரதமர்.

ரொறொன்ரோ கிறீக் ரவுனில் இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொல்லப் பட்டவர்களின் இறுதி சடங்குகள் இன்று நடைபெற்றன. ஞாயிற்றுகிழமை டன்வோத் அவெனியுவில் 29-வயது மனிதன் ஒருவன் சிதறிய துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு உயிரிழந்த 18-வயது றீஸ் வொலொன் மற்றும் 10-வயது ஜூலியானா கொசிஸ் இருவரினதும் இறுதிச்சடங்குகள் இன்று இடம்பெற்றன.

கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, ஒன்ராறியோ துணை முதல்வர் கிறிஸ்ரி எலியட் மற்றும் ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி ஆகியோர் வொலொனின் மரண சடங்குகளில் கலந்து கொண்டனர்.

கொசிசின் தனிப்பட்ட சடங்குகள் மார்க்கம் ஒன்ராறியோவில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இடம்பெற்றது. சமீபத்தில் உயர்தர கல்வியை முடித்த வொலொன் எதிர்காலத்தில் ஒரு நர்சாக வர விரும்பியவர் எனவும் இவரது மரணம் மிகவும் துயரமானதெனவும் பெற்றோர் தெரிவித்தனர்.

எதிர் வரும் இலையுதிர் காலத்தில் ஹமில்ரன் மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் நர்சிங் பயிற்சி பெற இருந்தவர். ரொறொன்ரோ-பீச்சர்ஸ்-ஈஸ்ட் யோர்க் இளம் லிபரல் கட்சி ஆதர வாளர்களிற்கான இளைஞர் அமைப்பிலும் அங்கத்தவராக இருந்தவர்.

ஸ்காபுரோ Highland Funeral Home-ல் நடைபெற்ற இறுதி சடங்கு வைபவத்தில் கலந்து கொண்ட பின்னர் ட்ரூடோ சூட்டு சம்பவம் இடம்பெற்ற கிறிக் ரவுன் பகுதிக்கும் செல்ல உள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top