Canada

ரொறொன்ரோ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு கண்விழித்து அஞ்சலி செலுத்திய மக்கள்!!

கனடா – ரொறொன்ரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நூற்றுக்கணக்கானோர் கூடி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இவர்கள், உயிரிழந்தவர்களுக்காக நாளை வரை உறங்காமல் கண்விழித்து பிரார்த்தனை நடத்தவுள்ளனர். துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற Danforth Avenue பகுதியிலுள்ள தேவாலயத்திற்கு முன்பாக நூற்றுக்கணக்கானோர் திரண்டு நேற்று இந்த அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 18 வயதான யுவதி ஒருவரும் 10 வயதான சிறுமி ஒருவரும் உயிரிழந்தனர். அத்தோடு, 13 பேர் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 29 வயதான பைஸல் ஹூசைன் என்பவரே இத்துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தாக்குதல்தாரி, பொலிஸாரை நோக்கி சுட முற்பட்ட போது அவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பைஸல் ஹூசைன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அதனால் இவ்வாறு நடந்துகொண்டிருக்கலாம் என்றும் அவரது குடும்பத்தார் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தனர். எனினும், இத்தாக்குதலுக்கு நேற்று ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு உரிமை கோரியிருந்தது. ஆனால், அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லையென கனேடிய பொலிஸார் கூறியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top