Canada

ரொறொன்ரோ வைத்தியசாலைக்கு இதுவரை கிடைத்திராத மிகப்பெரிய நன்கொடை!

ரொறொன்ரோ சென்ட்.ஜோசப் சுகாதார மையத்திற்கு வழங்கப்படும் ஒரு 10-மில்லியன் டொலர்கள் நன்கொடை நகரின் ஓய்வில்லாத MRI மையங்களில் ஒன்றான இதனை விரிவு படுத்த வழிவகுக்கும். பிரபல்யமான தொழிலதிபர் வழங்கும் இந்த நன்கொடை சென்ட்.ஜோசப் வைத்தியசாலைக்கு இதுவரை கிடைத்திராத மிகப்பெரிய நன்கொடையாகும்.

குடியிருப்பு வீடமைப்பு நிறுவனமான Mattamy Homes நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பீற்றர் கில்கன் குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு 10-மில்லியன் டொலர்களை வழங்குகின்றார். தரமான சேவைகள் மற்றும் விநியோகத்தை விரைவு படுத்தவும் நிறுவப்பட்ட ஒரு சுகாதார பராமரிப்பு முயற்சிக்கு இந்த நன்கொடை சேர்க்கப்படும் என கூறப்படுகின்றது.

இவருக்கும் வைத்தியசாலைக்கும் தொடர்புகள் உள்ளன. இவரும் இவரது உடன் பிறப்புக்கள் அறுவரும் சென்ட்.ஜோசப் வைத்தியசாலையில் பிறந்தவர்கள்.இவர் ஒரு பரந்த கொடையாளியாவார். 2014-ல் சென்.மைக்கல் வைத்தியசாலைக்கு 30-மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளார்.

முன்னாள் மேப்பிள் லீவ் கார்டனில் அமைந்துள்ள றயர்சன் பல்கலைக்கழகத்தின் தடகள மையமத்திற்கு 15-மில்லியன் டொலர்களை 2011-ல் வழங்கினார். ஒவ்வொரு வருடமும் 15,000ற்கும் மேற்பட்ட MRI-காந்த ஒத்திசைவு படமெடுத்தல் நடைபெறுகின்றன அதுவும் 24/7 இயங்கும் தனி ஒரு இயந்திரத்துடன்.

வைத்தியசாலையின் ஒரு பகுதி Gilgan Family wing என பெயர்மாற்றம் செய்யப்படும் என அவசர சேவை பிரிவை சேர்ந்த டைக் தெரிவித்தார். நகரில் அமைந்துள்ள ஓய்வற்ற அவசர சேவை திணைக்களங்களில் சென்ட்.ஜோசப்பும் ஒன்றாகும் என கூறப்பட்டுள்ளது. வருடந்தோறும் 100,000 மக்கள் இப்பிரிவிற்கு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top