News

வட மாகாண அமைச்சரவை விபரத்தை அறிவிக்குமாறு முதலமைச்சருக்கு ஆளுநர் அதிரடி அறிவுறுத்தல்.

வட மாகாண அமைச்சரவை தொடர்பான குழப்பநிலை நீடிக்கின்ற நிலையில், இன்றைய தினம் முதலமைச்சருக்கு ஆளுநர் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை விபரத்தை தெளிவுபடுத்துமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு, ஆளுநர் ரெஜினோலட் குரே அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

முதலமைச்சரினால், பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் பா.டெனீஸவரனுக்கு அவருடைய அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், வட மாகாண அமைச்சர்கள் ஐந்து பேர் யாவர் என்ற விபரத்தை வழங்குமாறு முதலமைச்சருக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளதாக ஆளுநர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top