News

விசேட மேல் நீதிமன்றங்கள் எமது ஆட்சியில் இயங்காது: பசில் ராஜபக்ச .

நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள விசேட மேல் நீதிமன்றங்கள் எதுவும் அடுத்து ஆட்சிக்கு வரும் தமது அரசாங்கத்தின் கீழ் இயங்காது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிலாபம் நாத்தாண்டிய நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் தவறுகள் எதுவும் தமது கட்சி அமைக்கும் அரசாங்கத்தின் கீழ் நடக்காது எனவும் ஒருவர் தவறு செய்தார் என்பதால், அந்த தவறை செய்ய தமது கட்சி தயாரில்லை எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் நடந்த நிதி உட்பட ஊழல், மோசடிகள் தொடர்பான வழக்குகளை துரிதமாக விசாரித்து முடிக்க நல்லாட்சி அரசாங்கம், மூன்று விசேட மேல் நீதிமன்றங்களை ஏற்படுத்தும் திருத்தச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றியது.

இதற்கு அமைய ஏற்படுத்தப்பட்ட முதலாவது விசேட மேல் நீதிமன்றம் அடுத்த சில தினங்களில் தனது விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top