News

விசேட மேல் நீதிமன்றம் தொடர்பில் பதற்றமடைந்திருக்கும் கோத்தபாய தரப்பு .

வழக்குகளை துரிதமாக விசாரித்து தண்டனை வழங்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள கோத்தபாய ராஜபக்ச தரப்பு கடும் பதற்றத்திற்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள பல சம்பவங்கள் தொடர்பான வழக்கு ஆவணங்கள் விசேட சட்டத்தரணிகள் குழு ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சட்ட ஆலோசனை பெறப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதேவேளை விமல் வீரவங்ச, மகிந்தானந்த அளுத்கமகே, நாமல் ராஜபக்ச, யோஷித்த ராஜபக்ச போன்றோரும் இந்த விசேட நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து, அவர்களுடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பலவிதமான கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.குறிப்பாக தாம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுப்பதை தடுக்க இவர்கள் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தவிர விசேட மேல் நீதிமன்றம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை உருவாக்குமாறும் ஊழல், முறைகேடுகள் மற்றும் குற்றங்கள் சம்பந்தமாக விபரங்களை செய்திகளில் வெளியிடாமல், ராஜபக்சவினருக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான செய்தியை வெளியிடுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. அதேவேளை கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான வழக்குகளை விசாரணைக்கு எடுக்கும் போது, நீதிமன்றத்திற்கு அருகில் அங்கவீனமடைந்த இராணுவ உறுப்பினர்களை அழைத்து வந்து ஊடகங்களிடம் கருத்துக்களை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிய கிடைத்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top