News

விஜயகலா எதிரொலி! கலக்கத்தில் தென்னிலங்கை!

விஜயகலா போன்றோரின் அறிவிப்பினால் சிங்கள அரசியல் தலைவர்களின் இயலாமை வெளிப்படுவதாகவும், இந்த இயலாமைக்கு அரசியல் உலோபித்தனமும், சந்தர்ப்பவாதமுமே காரணம் எனவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசியல் வாதிகளினால் நாட்டில் ஒரு சட்டத்தை பேண முடியாதுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

விஜயகலா போன்றோரின் அரசியல் நடவடிக்கைகளை புரிந்து கொள்ள முடியாதுள்ளது. சில போது விஜயகலா உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோர் வடக்கிலிருந்து இராணுவ, பொலிஸ் அதிகாரத்தை குறைக்க வேண்டும் எனவும், பாதுகாப்பு சோதனைச் சாவடிகளை நீக்குமாறும் கூறுகின்றனர்.

இவ்வாறு பாதுகாப்புக்கள் நீக்கப்பட்டதன் பின்னர், தமது பிள்ளைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படும் போது விஜயகலா போன்ற தமிழ் அமைப்புக்கள் மீண்டும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு விரல் நீட்டுகின்றனர்.

இந்த நாட்டில் தமிழர் என்பதற்காக முகம்கொடுத்த பிரச்சினை என்ன? என்றே எம்மால் கேட்க வேண்டியுள்ளதாகவும் ஞானசார தேர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரத்தில் சமய நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top