News

விடுமுறையை கழிக்க படகில் சென்ற சிறுவன்.. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட பரிதாபம்!

விடுமுறையை கழிப்பதற்காக இத்தாலியில் சுற்று பயணம் மேற்கொண்ட 14 வயது பிரித்தானிய சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Chelmsford பகுதியை சேர்ந்த Devon White என்ற 14 வயது சிறுவன், தனது விடுமுறையை கழிப்பதற்காக இத்தாலிக்கு சென்றுள்ளான். அங்கு வாடகைக்கு படகு ஒன்றினை எடுத்து தனது மாமா, மூத்த சகோதரர் மற்றும் இரு நண்பர்களுடன் பயணம் செய்துள்ளார்.

அங்கு திமிங்கலத்தை வேட்டையாட பயன்படுத்தும் கூர்மையான ஈட்டினை, பாறையை நோக்கி செலுத்தியுள்ளார். ஆனால் அந்த ஈட்டியில் ஏற்பட்டிருந்த பழுதின் காரணமாக, ஈட்டி Devon இடது கண்ணை பதம் பார்த்தது. 60 கிமீ வேகத்தில் செலுத்தப்பட்ட அந்த ஈட்டியானது, Devon முகத்தில் அணிந்திருந்த கண்ணாடியை உடைத்துக்கொண்டு கண் பகுதியில் முழுவதுமாக நுழைந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், சிறுவனை பத்திரமாக மீட்டு சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து 100 மைல் தூரத்தில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 மணி நேரம் வழங்கப்பட்ட தீவிர சிகிச்சைக்கு பின்னர், வெற்றிகரமாக ஈட்டி அகற்றப்பட்டது. பின்னர் இதுகுறித்து பொலிஸ் உயர் அதிகாரி Capasso கூறுகையில், சிறுவன் உயிருடன் இருப்பது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தருகிறது. என் அனுபவத்தில் இதுபோன்று காயமடைந்தவர்கள் உயிர் பிழைப்பது அரிதான ஒன்றே என தெரிவித்தார்.

மேலும், 14 வயது சிறுவன் அந்த ஆயுதத்தை பயன்படுத்தியது தொடர்பாக அவனது மாமா மற்றும் சகோதரன் மீது வழக்கு பதியப்படலாம் எனவும் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து மருத்துவர் கூறுகையில், விபத்தில் சிறுவனின் முக்கியமான உறுப்புகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. ஆனால் அவனுக்கு மீண்டும் பார்வை கிடைக்குமா என்பது சந்தேகமே என தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top