வித்தியா படு கொலை தொடர்பில் களத்தில் மகிந்த அணி!

தூக்குத் தண்டனையை நிறைவேற்று வதாயின், அதற்கு முதல் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைச் சந்தேகநபர்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோ கங்களில் ஈடுட்டவர்களுக்கே நிறைவேற்ற வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
பாலியல் குற்றவாளிகளைவிடுத்து, பாதாள உலகக் குழுவை முதலில் குறிவைப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. நாட்டில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற மீண்டும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரசு குறிப்பிட் டுள்ளது.
பாதாள உலகக் குழுவைக் குறிவைத்து இந்தத் தண்டனையை நிறைவேற்றவுள்ளனர்.தூக்குத்தண் டனையை நிறைவேற்று வதாயின் புங்குடுதீவு மாணவி வித்தியாவைப் படுகொலை செய்தவர்களை முதலில் தூக்கிலிட வேணடும். பெரும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களும் உள்ளனர். அவர்களை முதலில் தூக்கிலிட வேண்டும்.
இவற்றை விடுத்து போதைப்பொருள்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவினரை குறிவைத்துள்ளமை யானது, சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இந்த அரசின் பின்னணியில் பாதாள உலகக் குழுவினர் உள்ளனர் என்ற குற்றச்சாட்டுப் பரவலாகக் காணப்படுகின்றது. அவற்றை மூடிமறைக்கவா அரசு இந்தச் செயற்பாட்டை மேற்கொள்கின்றது? என்றார்.