விரைவில் ரொறொன்ரோவில் ஓட்டுநர் இல்லாத சிறு தூர பிரயாண வண்டி!

ரொறொன்ரோ- விரைவான போக்குவரத்துடன் சுலபமாக தொடர்பு கொள்ள முடியாத பல குடியிருப்பாளர்களிற்கு உதவும் வகையில் ஓட்டுநரில்லாத சிறு தூர பயணவண்டி விரைவில் ரொறொன்ரோவில் சேவைக்கு வர உள்ளது.< இது சம்பந்தபட்ட அறிக்கை ஒன்று அடுத்த வாரம் பொது குழு கமிட்டிக்கு செல்ல உள்ளது. இது குறித்த பைலட் திட்டமொன்று 2020-ல் ஆரம்பிக்கப்பட உள்ளது.
பெரும்பாலான குடியிருப்பாளர்கள் விரைவான போக்குவரத்து நிலையங்களை உபயோகிப்பதில்லை. காரணம் இவர்கள் மிக தொலைவில் வசிப்பதேயாகும். குறிப்பிட்ட வாகனம் ஒரே தடவையில் 8 முதல் 12 பயணிகளை உள்ளடக்க கூடியது. TTC அல்லது Metrolinx ஊழியர் ஒருவர் குறிப்பிட்ட வண்டியில் பிரதி நிதியாக இருப்பர். வாகனங்கள் உயர்நிலை தன்னியக்கம் மூலம் தானாகவே இயங்க கூடியது. இத்திட்டம் மிகவும் அற்புதமான ஒரு திட்டமாக அமையலாம்.