வீதி சீற்றத்தினால் சிறு பெண் குழந்தை படுகாயம்!

ரொறொன்ரோ-நெடுஞ்சாலை 401-ல் இடம்பெற்ற மூன்று வாகனங்கள் மோதலில் 17-மாதங்களே ஆன பெண் குழந்தை படுகாயமடைந்துள்ளதாக மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர். 59-வயதுடைய மனிதன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அபாயகரமாக வாகனம் செலுத்தி உடலிற்கு தீங்கு விளைவிக்கும் வண்ணம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக அறியப்படுகின்றது.
திங்கள்கிழமை காலை 12.30-ற்கு சிறிது பின்னராக லெஸ்லி வீதி வெளியேற்றத்தில் விபத்து நடந்துள்ளதென பொலிஸ் அதிகாரி கெரி சிமித் தெரிவித்துள்ளார். இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சிறிய மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பின்னர் மூன்றாவது வாகனம் வந்து முன்னய வாகனங்களுடன் மோதியுள்ளது. வீதி சீற்றம் மோதலிற்கு காரணமாகலாம் என கருதப்படுகின்றது.
குழந்தை காயப்பட்டதுடன் பெண் சாரதி ஒருவரும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மை என்னவெனில்17-மாத சிறிய பெண் குழந்தை மிக கடுமையான நிலைமையில் இருப்பதே முற்றிலும் இதயத்தை பிளக்கும் செய்தியாக அமைந்துள்ளது. சிறுமி எங்கே என்பது எவருக்கும் தெரியாது. வீதிகள் பகிரப்படுவதற்கு மட்டுமல்லாது சீற்றம் கொள்வதற்கல்ல.<