வெளிநாட்டுக்கு சென்ற கனடியர் துப்பாக்கிசூட்டில் பலி: காப்பாற்ற முயன்ற மனைவிக்கு நேர்ந்த கதி !

கனடியர் ஒருவர் பில்லிபைன்ஸில் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் அவர் மனைவி படுகாயமடைந்துள்ளார். பேரி கமான் (66) என்பவர் தனது மனைவி லுஸ்விமிண்டா மற்றும் ஒன்பது வயது மகனுடன் பில்லிபைன்ஸில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 24-ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் கமான் வீட்டுக்கு வந்த இரண்டு மர்மநபர்கள் பேரியை துப்பாக்கி சுட்டுள்ளனர்.
இதை தடுக்க முயன்ற லுஸ்விமிண்டா மீதும் துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இதையடுத்து கமானும், லுஸ்விமிண்டாவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கமான் பரிதாபமாக உயிரிழந்தார். லுஸ்விமிண்டா சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சம்பவம் குறித்த உண்மை நிலையை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர். பொலிசார் கூறுகையில், சொத்து பிரச்சனையால் இந்த கொலை நடந்துள்ளது. இது தொடர்பாக ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம், நீதிமன்ற உத்தரவு வந்தவுடன் அவரை கைது செய்யவுள்ளோம் என கூறியுள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நபர் குறித்த விபரங்களை பொலிசார் வெளியிடவில்லை.