News

வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த பச்சிளம் குழந்தை: போராடி மீட்ட தாய்லாந்து வீரர்கள் !

லாவோஸ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய பச்சிளம் கைக்குழந்தையை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். லாவோஸ் நாட்டின் தெற்கு மாகாணத்தின் அட்டாபே பகுதியில் அணை ஒன்று இடிந்து விழுந்ததால் அருகே உள்ள கிராமங்களுக்குள் கடந்த ஜூலை 23 ஆம் திகதி முதல் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுவதாக கூறப்படுகிறது.

இதில் பலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து தாய்லாந்து மற்றும் லாவோ நாடுகளைச் சேர்ந்த மீட்ப்படையினர் அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிருக்கு போராடி வந்த ஒரு கைக்குழந்தையை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

இந்நிலையில் வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் இதுவரை 27 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 131 பேர் மாயமாகி இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top