Canada

வைத்தியரின் இழப்பால் அதிரச்சியில் வைத்தியசாலை!

வியாழக்கிழமை மார்க்கம் பட்டன்வில் விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான மோதலில் மரணமடைந்தவர் உள் ஊர் வைத்தியர் ஒருவர் என அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மார்க்கம்-ஸ்ரோவ்வில் வைத்தியசாலை டாக்டர் Shehbaz Butt என்பவரே மோதலில் கொல்லப்பட்டவர் என வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளதாக அறியப்படுகின்றது. இவர் குறிப்பிட்ட வைத்தியசாலையில் மயக்க மருந்து கொடுப்பவராக பணிபுரிந்தவர்.

வைத்திய அணியில் மிகவும் அதிக மதிப்புள்ள அங்கத்தவர் எனவும் இவரின் இழப்பு அதரிச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் வைத்தியசாலை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. அவசர சேவை குழுவினர் வியாழக்கிழமை சம்பவ இடத்திற்கு சென்றடைந்த நேரம் விமானத்தின் இடிபாடுகள் எரிவதை கண்டதாக கூறப்பட்டுள்ளது. ஓடு பாதையில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Butt அன்பு, நேர்மை, மனித நேயம், வெளிக்கள ஆர்வலர் மற்றும் இரக்க சுபாவம் கொண்டவர் என இவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவிக்கின்றனர். 2014-ல் மார்க்கம் ஸ்ரோவில் வைத்தியசாலை அறக்கட்டளைக்கு உதவ எவரெஸ்ட் மலை ஏறுவதற்கு புறப்பட்ட சமயம் கொடிய பனிச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து முயற்சி கைவிடப்பட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top