அமெரிக்காவின் Missouri பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் படகு ஒன்று மூழ்கி 13 பேரை பலி கொண்ட சம்பவத்தின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 31 பேருடன் சென்ற அந்த படகு புயலில் சிக்கி மூழ்கியது. படகு மூழ்கியதில் நீரில் மூழ்கி பலியான 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 14 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் நான்கு பேரைக் காணவில்லை.
தொடர்ந்து அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.படகு சவாரியின் போது மணிக்கு 60 மைல் வேகத்தில் காற்று வீசியதே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. திடீரென அதிகப்படியான காற்று வீசியதால் படகு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகவும், மீட்கப்பட்டவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த படகு சவாரியில் இதற்கு முன்னதாக 2 முறை விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு படகில் சென்ற ஒருவர் இச்சம்பவத்தை படம்பிடித்துள்ளார். அதில் படகு தண்ணீரில் சிக்கி தத்தளிப்பதும் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்குவதும் படமாக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.