News

4 நாட்களில் 30 கொள்ளை சம்பவங்கள்.. பிரித்தானியாவில் அட்டுழியம் செய்த 4 சிறுவர்கள் கைது!

பிரித்தானியாவின் Manchester பகுதியில் கடந்த 4 நாட்களில் 30க்கும் மேற்பட்ட பல்வேறு விதமான சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானியாவின் Greater Manchester பகுதியில் கடந்த 4 நாட்களில் அதிகமான கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாக 30க்கும் மேற்பட்ட போன் கால்கள் வந்திருந்தன. மர்ம நபர்கள் சிலர் கையில் ஆயுதங்களுடன் மிரட்டி உடமைகளை திருடுவதாக புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து உஷாரான Greater Manchester போலீசார் உடனடியாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய ஆரம்பித்தனர். அதில் தொடர்புடைய 14 வயதுடைய இரண்டு சிறுவர்களையும், 15 வயதுள்ள இரண்டு சிறுவர்களையும் பொலிஸார் தற்போது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பின்னர் இதுகுறித்து பேசிய தலைமைக்காவலர் Cherie Buttle, நகரப்பகுதிகளில் யாரேனும் ஆயுதங்களுடன் செல்கிறார்களா என பகல் மற்றும் இரவு நேரங்களில் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்தார். மேலும், மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top