Canada

55-காட்டுத்தீக்களில் 21காட்டு தீக்கள் கட்டுப்பாட்டை மீறிய நிலையில்!

ரொறொன்ரோ-ஒன்ராறியோவின் வடகிழக்கு பகுதியில் திங்கள்கிழமை வரை தீயணைப்பு வீரர்கள் 55-காட்டுத்தீக்களுடன் போராடியுள்ளனர். இருப்பினும் இன்னமும் 21-ஐ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியவில்லை.

ரிம்மிஸ் பகுதியின் வடகிழக்கில் கொக்றேன் 14-என்ற இடத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயானது 4,899 ஹெக்டர்கள் வரை வளர்ந்துள்ளதுடன் கட்டுப் பாட்டையும் இழந்துள்ளதாக இயற்கை வழங்கள் மற்றும் வனவிலங்கு அமைச்சு தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை பரி சவுன்ட் 33 பகுதியில் மிகப்பெரிய தீப்பிழம்பு 5,612-ஹெக்டர்கள் வரை பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை அணைப்பதற்கு ஹெலிஹொப்டர்கள் மற்றும் விமானங்கள் போராட வேண்டியிருந்தது.

நெடுஞ்சாலை 69/400 முழுவதுமாக மூடப்பட்டது. கூடாரங்களில் தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஒன்ராறியோ பணியாளர்களிற்கு உதவ கனடா, மினசோட்டா, விஸ்கொன்சின் மற்றும் மெக்சிக்கோ ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்களும் உபகரணங்களும் குவியத்தொடங்கின.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top