News

600 சிறுவர்களை நரபலி கொடுத்த மத போதகர்: வெளியான திகிலூட்டும் சம்பவம் !!

ஆப்பிரிக்க நாடான கானாவில் மத போதகர் ஒருவர் சுமார் 600 சிறுவர்களை மத சடங்குகளுக்காக நரபலி கொடுத்துள்ளதாக திகிலூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை தொடர்புடைய மத போதகரே வெளிப்படையாக தெரிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நரபலிக்காக சாத்தான் வழிபாடுகளில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிறுவர்களை குறித்த மத போதகருக்கு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முகமூடி அணிந்து வீடியோ ஒன்றில் தோன்றிய பெயர் குறிப்பிடாத அந்த மத போதகர் கடந்த 17 ஆண்டுகளாக சாத்தானுடன் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை சடங்குகளுக்காக 675 பேரை கொலை செய்துள்ளதாக கூறும் அவர், அதில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸ் விசாரணை எதுவும் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த சம்பவமானது கானாவில் எந்த பகுதியில் நடைபெற்றது, எப்போது நடைபெற்றது உள்ளிட்ட தகவல்களையும் அவர் வெளியிட மறுத்துள்ளார். தாம் துர்சக்தியுடன் பிறந்தவர் எனவும் தமது சக்தியை தக்கவைத்துக் கொள்ளவே நரபலி கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top