News

பிரதமர் ரணிலை சந்தித்தார் விஜயகலா!

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. எனினும், சந்திப்பின் பின்னர் வெளியேறிய விஜயகலா மகேஸ்வரன் ஊடகங்கள் எதனையும் சந்திக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வு ஒன்றின் போது இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப் புலிகளின் மீள் வருகை குறித்து பேசியிருந்தார்.

இது தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்து. ஆளும் மற்றும் எதிர் தரப்பினர்கள் என பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஜயகலா மகேஸ்வரனை சந்தித்து பேசவுள்ளதாக அறிவித்திருந்தார். இவ்வாறான நிலையில், சற்று முன்னர் இருவருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top