கேமரூனில் இராணுவ உடைந்த அணிந்திருந்த இரண்டு பேர் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்களை மூடிவிட்டு சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆப்பிரிக்காவின் Cameroon-ல் இராணுவ உடை அணிந்திருந்த இரண்டு பேர், பெண்கள் மற்றும் குழந்தைகளை திட்டிய படியே அழைத்துச் செல்கின்றனர்.
அப்போது கண்ணாடி அணிந்திருந்த நபர், நீ Boko Haram இயக்கத்தைச் சேர்ந்தவள், நீ சாகப்போகிறாய் என்று அவரது முகத்தில் அடிக்கிறார்.அதன் பின் அவர்கள் தாங்கள் அழைத்து வந்திருந்த இரண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்களை துணியால் மூடிவிட்டு, சிறிது தூரம் சென்று தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து சுட்டுள்ளனர். இதனால் அவர்கள் சம்பவ இடத்திலே துடி துடித்து இறந்துள்ளனர்.
இதனால் இந்த செயலலில் ஈடுபட்டது யார் என்பது குறித்து அந்நாட்டு பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், Boko Haram என்றால் அது ஒரு தனி இஸ்லாமியா அமைப்பு எனவும் வட கிழக்கு நைஜீரியாவில் மையம் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.