Business

லண்டனில் அகதி இளைஞரை கொலை செய்த இளம்பெண்: வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்ட கொடூரம்

பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் தமது காதலரை ஆள்வைத்து கொடூரமாக கொலை செய்துள்ள வழக்கில் தீர்ப்பு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு லண்டனில் உள்ள Acton பகுதியில் இந்த கொடூர கொலை சம்பவம் நடந்துள்ளது. ஃபாத்திமா கான் என்ற 20 வயது இளம்பெண்ணுக்கு ஆப்கானிஸ்தான் அகதி இளைஞருடன் கடந்த 2 ஆண்டுகளாக நெருக்கம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் குடும்பத்தினரின் எதிர்ப்பு மற்றும் புதிய நட்பு காரணமாக ஃபாத்திமா தமது காதலர் கலீத் ஸாபியை(18) புறக்கணித்து வந்துள்ளார். மட்டுமின்றி தமது புதிய காதலுக்கு ஸாபியால் பிரச்னை எழும் என கருதிய ஃபாத்திமா அந்த ஆப்கான் இளைஞரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கென ராஸா கான் என்ற 19 வயது இளைஞரை அணுகி, குறித்த திட்டத்தை விவாதித்துள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் திகதி ஆப்கான் அகதியும் காதலருமான ஸாபியை வரவழைத்து, இருவரும் அருகாமையில் உள்ள காபி ஷாப்புக்கு சென்றுள்ளனர்.

அங்கே திட்டமிட்டபடி ராஸா கான் ஆயுதத்துடன் சென்று ஸாபியை கொடூரமாக கத்தியால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த கலீத் ஸாபி சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

கலீத் ஸாபி துடி துடிக்க மரணமடைந்த காட்சிகளை தமது மொபைலில் வீடியோவாக பதிவு செய்த ஃபாத்திமா, அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றி, இது ஒரு பாடமாக இருக்கட்டும் என தலைப்பிட்டுள்ளார். இதனிடையே ஸாபியுடன் நடந்த சண்டையில் காயமுற்ற ராஸா அங்கிருந்து தலைமறைவான பின்னர் இதுவரை எங்கிருக்கிறார் என்ற தகவல் இல்லை.

இந்த விவகாரம் தொடர்பில் ஃபாத்திமாவை கைது செய்த பொலிசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். தற்போது அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் ஃபாத்திமாவுக்கான தண்டனையை எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Latest News

To Top