கட்டுநாயக்கவில் ஏற்பட்ட பாரிய மோதல்! அதிரடியாக செயற்பட்ட பொலிஸ்! நேரடியாக தலையிட்ட வெளிநாட்டு அரசு!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் 5 பேரை, வெளிநாட்டு தம்பதியினர் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குவைத் அரசாங்கம் நேரடியாக தலையிட்டு முடிவுக்கு கொண்டு வர முயற்சித்துள்ளதாக தெரிய வருகிறது. சுங்க அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குவைத் நாட்டு தம்பதியர், இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தம்பதி குவைத்தில் இருந்து நாயை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த சந்தர்ப்பத்தில் விசாரணைகளை மேற்கொண்ட சுங்கப் பிரிவினர் நாயை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரினர். எனினும், இதற்கு மறுப்பு தெரிவித்த குவைத் தம்பதி, விமான நிலையத்திற்கு வெளியே நாயை கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதனை அதிகாரிகள் தடுத்தமையினால் இந்த தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டு விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். எப்படியிருப்பினும், இந்த பிரச்சினையில் இதுவரையில் தூதரகம் தலையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட குறித்த தம்பதி இருவரும் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.