News

பிரித்தானிய கடற்படையால் காப்பாற்றப்பட்ட அகதி: மான்செஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பில் வெளியான பகீர் தகவல்

பிரித்தானியாவை உலுக்கிய மான்செஸ்டர் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை 3 ஆண்டுகளுக்கு முன்னர் லிபியாவில் இருந்து பிரித்தானிய கடற்படையே காப்பாற்றி அழைத்து வந்த பகீர் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. HMS Enterprise என்ற பிரித்தானிய கடற்படை கப்பலானது கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் லிபியா கடற்கரையில் குவிந்திருந்த அப்பாவி மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது பிரித்தானிய கடற்படையால் மீட்கப்பட்டு மால்டா வழியாக பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் ஒருவர் தான் 22 அப்பாவி மக்களை பலி வாங்கிய மான்செஸ்டர் குண்டுவெடிப்பு பயங்கரவாதி Salman Abedi. கடந்த ஆண்டு மே மாதம் மான்செஸ்டர் அரங்கில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான Salman Abedi பிரித்தானிய மக்களுக்கு செய்த மிகப்பெரும் துரோகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரித்தானிய அரசின் ஆதரவுடன் மான்சென்ஸ்டரில் குடியிருந்த அபேதி சகோதரர்கள் தங்கள் பெற்றோரை சந்திக்கும் பொருட்டு அடிக்கடி லிபியா சென்று வந்துள்ளனர். மட்டுமின்றி அபேதி சகோதரர்கள் தொடர்பில் பிரித்தானிய உளவு அமைப்புகள் போதிய விசாரணை மேற்கொள்ள தவறியதும் மான்சென்ஸ்டர் குண்டுவெடிப்புக்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.

சலமான் அபேதியின் தந்தை 2011 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அப்போதைய லிபியா ஜனாதிபதிக்கு எதிராக எழுந்த போராட்டங்களில் கலந்து கொண்டு துப்பாக்கி ஏந்தியவர் என்ற தகவல் தற்போது மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அச்சமயத்தில் குறித்த இரு சகோதரர்களும் அவரது தந்தையுடன் இருந்தார்களா என்ற தகவல் இல்லை. ஆனால் லிபியாவில் சிக்கிய பிரித்தானியர்களை மீட்கும் நடவடிக்கை நடந்துவந்த காலகட்டத்தில் அபேதி சகோதரர்கள் இருவரும் லிபியாவில் இருந்துள்ளனர்.

மேலும், அரசுக்கு எதிரான போராளிகளுடன் இணைந்து அப்போது 19 வயதனா சல்மான் அபேதி போரிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையிலேயே காயம்பட்ட சல்மான் அபேதி பிரித்தானிய கடற்படையால மீட்கப்பட்டு மான்செஸ்டரில் தங்கவைக்கப்பட்டார். ஏற்கெனவே ஜிஹாதிகளுடன் தொடர்பில் இருந்த சல்மான் மற்றும் அவரது சகோதரர் இருவரும் இணைந்து மான்செஸ்டர் தாக்குதலுக்கு திட்டமிட்டனர் என தெரியவந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top