800-முழு-நேர வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் அமஷோன்!

ரொறொன்ரோ-கலிடோன் ஒன்ராறியோவில் அமஷோன் நிறுவனம் ஒரு புதிய நிறைவேற்றும் மையத்தை திறக்க உள்ளது. புத்தகங்கள் மின்னணு பொருட்கள் பொம்மைகள் போன்றன இந்த மையத்தில் சேகரித்தல் பொதி செய்தல் மற்றும் அனுப்புதல் போன்ற வேலைகள் இடம்பெறும். சியாட்டலை மையமாக கொண்ட இந்த மின்-வணிகம் இந்த மையம் 800-ற்கும் மேற்பட்ட முழு-நேர வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் என தெரிவித்துள்ளது.
ஒரு மில்லியன் சதுர அடி கொண்ட இந் மையம் ஒன்ராறியோவின் ஆறாவது அலகு ஆகவும் கனடாவின் ஒன்பதாவது அலகாகவும் அமையும். 2019 இறுதியளவில் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒட்டாவாவில் அமைக்கப்படும் நிறுவனத்தின் எதிர்கால அலகுடன் 1400ற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்களை மாகாணத்திற்கு கொண்டு வரலாம் எனவும் கருதப்படுகின்றது.