News

அதிகாலையில் கொடூரமாக கொல்லப்பட்ட 4 இளைஞர்கள்: பிரித்தானியாவை உலுக்கிய சம்பவம்

பிரித்தானியாவின் பிராட்போர்டு நகரில் மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த கார் ஒன்று சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விபத்து தொடர்பில் வெளியான வீடியோ காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது

வியாழனன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் இந்த கொடூர விபத்து நடந்துள்ளது. 22 வயது முர்டாஸா சௌத்ரி என்ற இளைஞர் தாம் சமீபத்தில் வாங்கிய BMW காரில் தமது எஞ்சிய 3 நண்பர்களுடன் நகரில் வலம் வந்துள்ளார். அப்போது அவர்களை பொலிஸ் வாகனம் ஒன்று பிந்தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பதற்றமடைந்த செளத்ரி மற்றும் நண்பர்கள் தங்கள் வாகனத்தை வேகமாக செலுத்தியுள்ளனர். பொலிஸ் வாகனம் பின்னால் துரத்துவதால் செளத்ரியின் கார் ஒரு சந்திப்பில் நுழந்து தவறான சாலை வழியே விரைந்துள்ளது. பொலிசிடம் சிக்காமல் இருக்க மின்னல் வேகத்தில் சென்ற கார் சாலை ஓரத்தில் நின்றிருந்த மரத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த சில நொடிகளில் பின்னால் துரத்தி வந்த பொலிஸ் வாகனமும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் காரில் இருந்த முர்டாஸா சௌத்ரி உள்ளிட்ட 4 இளைஞர்களும் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். விபத்து குறித்து கண்ணீருடன் பதிலளித்த முர்டாஸா சௌத்ரியின் தந்தை, தமது மகன் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பவன், அவனுக்கு நகரத்தின் எல்லா பகுதிகளிலும் நண்பர்கள் உள்ளனர்.

எந்த பிரச்னைக்கும் செல்லாத அப்பாவி அவன். நண்பர்களுக்காக எதையும் செய்பவன். வெளியே அதிக நேரம் தங்கி விடாதே, சிக்கலில் அந்து சென்று முடியும் என எப்போதும் அவனிடன் கூறி வந்துள்ளேன் என்றார் அவர். இந்த விபத்து தொடர்பாக மேற்கு யார்க்ஷயர் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், குறித்த இளைஞர்கள் வாகனத்தை பிந்தொடர்ந்த பொலிஸ் வாகனம் தொடர்பில் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். சாலை விபத்தில் கொல்லப்பட்ட நான்கு இளைஞர்களின் இறுதி ஊர்வலத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டு நல்லடக்கம் செய்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top