அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் நகரும் ஆபத்து !

அமெரிக்காவின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயின் புகைமூட்டம், வடக்கு நோக்கி நகர்ந்து கனடாவினுள் பாதிப்பினை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அமெரிக்காவின் வொஷிங்டன் பகுதியில் இருந்து பெருமளவு புகைமூட்டம் கனடாவினுள் வருவதனை, கனேடிய சுற்றுச்சூழல் திணைக்கள அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் நாட்களில், இவ்வாறு அதிகளவு புகை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும், இதனால் கனடாவின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சில நாட்களுக்கு புகைமூட்டம் சிக்கல் நிலவும் எனவும் கூறப்படுகின்றது. ஏற்கனவே காட்டுத் தீயினால் கனடா கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுதீ சம்பவங்களும், கனடாவின் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் அண்டை மாநிலங்களான அல்பேர்ட்டா, சாஸ்காச்சுவான் மற்றும் மனிட்டோபா மாநிலங்களில் புகை மூட்டப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஒன்ராறியோ கிழக்கில் ஏற்பட்ட காட்டுத் தீயும் புகை மூட்டப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இவற்றினால் பாதிக்கப்பட்ட இடங்களில் காற்றுத் தூய்மை மதிப்பீட்டுக் குறியீடும் மோசமான நிலையில் காணப்படுகின்றது.<