Canada

அமெரிக்காவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கனடா ..

வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் (NAFTA) தொடர்பாக அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் முக்கிய வர்த்தக அம்சங்களில் உடன்பாட்டை எட்டியுள்ள நிலையில் கனடா அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றது. 1 த்ரில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக வருடாந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கனடா, இந்த ஒப்பந்தத்தில் மூன்றாவது நாடாக உள்ளது.

கடந்த சில வருடங்களாக, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் நஃப்டா ஒப்பந்தத்தை மாற்றியமைத்து வருகின்றனர். ஆனால் கடந்த ஐந்து வாரங்களில் கனடா அந்த பேச்சுவார்த்தையில் பங்கு கொள்ளவில்லை. “கனடாவை இதில் இணைத்துக் கொள்வதா அல்லது கனடாவுடன் தனி ஒப்பந்தந்தத்தை ஏற்படுத்த வேண்டுமா என்பது குறித்து நாங்கள் தீர்மானம் எடுப்போம்” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

மேலும் வாகன இறக்குமதிகளுக்கு வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார். அத்துடன், நஃப்டா என்ற பெயர் தனக்கு தவறான சமிக்ஞையை தருவதாக குறிப்பிட்டிருந்த ட்ரம்ப், மெக்சிகோவுடனான பேச்சுவார்த்தையை அறிவித்த பின்னர் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ட்ரம்புடனான தனது பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளார்.

இரு தலைவர்களும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர், மேலும் பேச்சுவார்த்தையை வெற்றிகரமானதாக்கும் நோக்கத்துடன் அவர்களின் குழுக்கள் இந்த வாரம் தொடர்ந்து கலந்துரையாடுவார்கள்” என்று ட்ரூடோவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இன்று கனேடிய அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதனிடையே மெக்ஸிகோ ஜனாதிபதி என்ரிக் பேனா நியேடோவுடன் (Enrique Peña Nieto), கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top