அரசின் பங்காளிக்கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க முடியாது-சுமந்திரன்.

அமைச்சரவையில் அங்கம் வகித்துக்கொண்டு அரசாங்கத்தின் பங்காளியாக உள்ள ஒரு கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்குமாறு மஹிந்த அணியினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் கடுமையாக வாதிட்டனர்.
இதன்போது குறுக்கிட்டு பதிலளித்த சுமந்திரன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றது. அவ்வாறான நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதென குறிப்பிட்டுள்ளார்.