அரிய, பூரண மதிப்பெண்கள் பெற்ற ஒரே பாடசாலை சர்வதேச இளங்கலை திட்ட மாணவர்கள் மூவர்!

ஓக்விலில் அமைந்துள்ள வைற் ஓக்ஸ் இரண்டாம் நிலை பள்ளியை சேர்ந்த சர்வதேச இளங்கலை திட்ட(IB) மாணவர்கள் மூவர் மிக அரிதான பூரண மதிப்பெண்களை பெற்றுள்ளனர் என ஹால்ரன் மாவட்ட கல்வி சபை பெருமையுடன் அறிவித்துள்ளது. பிரயன் குவோ, ஹன்சன் லியு மற்றும் டாஷா மெற்றொபோலிட்ரான்ஸ்கி ஆகிய மூவருமே இவர்களாவர். குறிப்பிட்ட IB செயல் முறை திட்டம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற இரண்டு வருட டப்ளோமா திட்டமாகும்.
மிகவும் உந்துதல் பெற்ற மாணவர்களிற்கு சவாலான ஒரு பாடத்திட்டத்தை இது வழங்குகின்றது. மொழிகள், கணிதம், மனித நேயம், அறிவியல் துறைகளில் கூடுதலான கல்வி தீவிரத்தை வழங்குகின்றது. அத்துடன் மாணவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியையும் வலியுறுத்துகின்றதாக அமைகின்றது. உலகம் பூராகவும் 5,000 பாடசாலைகள்-ஹால்ரன் மாவட்ட பாடசாலை சபையை சேர்ந்த ஜோஜ் ரவுன் மாவட்ட உயர்தர பாடசாலை, றொபேட் பேட்மன் உயர்தர பாடசாலை மற்றும் வைட் ஓக்ஸ் இரண்டாம் தர பாடசாலை உட்பட. IB நிறுவனத்தின் கூற்று பிரகாரம் அமெரிக்க கண்டத்தில்-வட தென் அமெரிக்கா உட்பட்ட-ஆக 13 மாணவர்கள் மட்டும் பூரண மதிப்பெண்ணை (45 points), பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர்களில் மூவர் ஹால்ரன் மாவட்ட பாடசாலை சபையை சேர்ந்த ஒரே பாடசாலை மாணவர்களாவர். வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்காவில் சித்தி பெற்ற மாணவர்களில் காற் பங்கு மாணவர்கள் ஒன்ராறியோ,கனடாவை சேர்ந்தவர்கள்-ஹால்ரன் மாவட்ட பாடசாலை சபையை சேர்ந்தவர்கள். வரும் இலையுதிர் காலத்தில் குவோ வட கரோலினா டியுக் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்ட படிப்பை தொடர உள்ளார்.லியு மக்மாஸ்ர் பல்கலைக்கழகத்தில் சுகாதார அறிவியல் கல்வியை தொடர்கின்றார்.மெற்ரோபோலிற்றன்ஸ்கி ஹாவார்ட் பல்கலைக்கழகம் செல்கின்றார்.