Canada

அல்பேர்ட்டாவின் மக்டொனால்ட் உணவகம் ஒன்றில் கோப்பிக்கு பதிலாக சுத்தம் செய்யும் கரைசல்!

அல்பேர்ட்டாவின் தென் பகுதியில் லெத்பிரிட்ஜ் என்ற இடத்தில் மக்டொனால்ட் உணவகம் ஒன்றில் கோப்பிக்கு பதிலாக சுத்தம் செய்யும் கரைசல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. ஒரு வகை கோப்பியான latte கேட்ட அவருக்கு இத்திரவம் வழங்கப்பட்டுள்ளது. தனது மகனை பந்தாட்ட போட்டிக்கு அழைத்து செல்லும் வழியில் மக்டொனால்ட் உணவகம் ஒன்றின் இயக்கி-சாளரம் வழியாக கோப்பி வாங்க சென்றுள்ளார்.

ஒரு வாய் கோப்பியை வாய்க்குள் விட்ட போது வித்தியாசமான சுவையாக இருப்பது தெரியவந்துள்ளது.வாகனத்தை வெளியே எடுத்து வாயிலிருந்த கோப்பியை துப்பிவிட்டார். உணவகத்தின் உள்ளே சென்று முறைப்பாடு செய்தார். சுத்தம் செய்யும் லைன்கள் இரண்டு லற்றே மெசினுடன் இணைத்து விடப்பட்டிருந்ததாக உணவக ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெண் அல்பேர்ட்டா சுகாதார சேவைகள் சுகாதார இணைப்பு பிரிவினருடன் தொடர்பு கொள்ள அவர்கள் விஷ கட்டுப்பாட்டு பிரிவினருக்கு இணைத்து விட்டனர். மக்டொனால்ட் மன்னிப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டது. இத்தகைய ஒரு வன்மையான தன்மை எவ்வாறு மக்களை பாதிக்கும் என்பதை ஒரு தாயாக தான் கவலை கொள்வதாக இவர் தெரிவித்தார்.

பொது சுகாதார அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரனை செய்வதாக அல்பேர்ட்டா சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. ஒவ்வொரு தினமும் காலையில் மெசின் துப்பரவு செய்யப்படுவது வழக்கம் எனவும் துரதிஷ்ட வசமாக குறிப்பிட்ட நேரத்தில் பெண்ணின் பானம் தயாரிக்கும் போது பால் விநியோகம் செய்யும் லைன் துப்பரவு செய்யும் திரவத்துடன் சேர்க்கப்பட்டிருந்ததாகவும் மக்டொனால்ட் தெரிவித்துள்ளது. முறையான சுத்திகரிப்பு நடவடிக்கைள் குறித்த உடனடி பரிசீலனை மேற்கொள்வதாக உணவசம் தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top