அல்லாஹு அக்பர் என கத்தியபடி பொலிசார் மீது கத்தியை வீசிய அகதி: பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம்

தென் நெதர்லாந்தில் உள்ள Naaldwijk நகரில் வணிக வளாகம் ஒன்றில் அல்லாஹு அக்பர் என கத்தியபடியே பொலிசார் மீது கத்திய வீசிய நபரை அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>டச்சு மாகாணத்தில் உள்ள Naaldwijk நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள வணிக வளாகத்தில் புகுந்த நபர் கத்தியை காட்டி வாடிக்கையாளர்களை மிரட்டி வந்துள்ளார் ;இதனையடுத்து அந்த நபரின் உறவினர்கள் அச்சத்தில் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த பொலிசாரிடமும் அவர் கத்தியை வீசியுள்ளார். இதனையடுத்து அவசரம் பார்த்து அவர் மீது பாய்ந்த பொலிசார், ஒருவழியாக அந்த நபரை கைது செய்துள்ளனர்.
குறித்த நபருக்கு ஏதேனும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்க இருப்பதாகவும், பொதுமக்கள் மீது கத்தியை காட்டி மிரட்டிய அவர் அல்லாஹு அக்பர் என கத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், குறித்த நபர் சிரியா நாட்டவர் எனவும், தற்போது ஸ்வீடனில் குடியிருப்பதாகவும், நெதர்லாந்தில் குடும்பத்தாரை சந்திக்க வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது இந்த விவகாரம் தொடர்பில் டச்சு பொலிசார் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர், விசாரணையில் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.