பெரு நாட்டில், முன் சக்கரம் இயங்காத நிலையிலும் பத்திரமாக விமானத்தை தரையிறக்கிய விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
பெரு நாட்டில் Ayacucho பகுதியில் உள்ள விமான நிலையத்திலிருந்து, LC Peru என்ற விமானம் 64 பயணிகளுடன் கிளம்பியுள்ளது.உயரத்தை அடைந்த சில நிமிடங்களிலே, விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாவும், அதனை உடனே தரையிறக்குமாறும் விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
ஆனால் ஓடுதள பாதையை சீர்படுத்த சில நிமிடங்கள் தேவைப்பட்டதால், வானிலே விமானி வட்டமிட்டுக் கொண்டிருந்துள்ளார். பின்னர் அனுமதி கிடைத்ததும், வேகமாக விமானத்தை தரையிறக்க முற்பட்டுள்ளார்
ஆனால் திடீரென அதன் முன் சக்கரம் இயங்காமல் போனதால், மிகவும் துணிச்சலுடன் சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கினார்.விமானம் நின்ற அடுத்த நொடியிலே அவசர வாகன ஊர்திகள் விரைந்து சென்று பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சாமர்த்தியமாக செயல்பட்ட விமானிக்கு தங்களுடைய பாராட்டுக்களை கூறினர்.