அவசர” இரத்ததானம் செய்பவர்களை தேடும் கனடிய இரத்த சேவைகள்!

அடுத்த 12நாட்களில் 22,000 அவசர இரத்ததான கொடையாளிகள் தேவைப்படுவதாக கனடிய இரத்த சேவைகள் அறிவித்துள்ளது. தொழிலாளர்தின வார இறுதி நாட்களிற்கு முன்னர் கொடையாளிகள் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 26ந்திகதிக்கு முன்னர் 22,000ற்கும் மேற்பட்ட நன்கொடைகள் தேவைப்படுகின்றதென அமைப்பு குறிப்பாக தெரிவிக்கின்றது.
விடுமுறைகள் மற்றும் மீண்டும்-பாடசாலை ஆயத்தங்கள் காரணமாக நன்கொடைகள் அளவு குறைவதால் தொழிலாளர் தினம் காரணமாக இந்த அவசரம் என கூறப்படுகின்றது. இரத்ததான் ஒரு உயிர் காக்கும் பழக்கமாகும். அந்நியர் ஒருவரின் வாழ்க்கையில் உண்மையான மாற்றம் ஒன்றை ஏற்படுத்தக்கூடியது என கனடிய இரத்த சேவை தலைமை விநியோக அதிகாரி றிக் பிரின்சென் தெரிவித்துள்ளார்.
அதாவது வைத்தியசாலைகளில் அவசர பரிமாற்றங்களிற்கு அடிக்கடி உபயோகிக்கப்படுவது. இரத்ததான நன்கொடை நியமனங்கள் கனடிய இரத்த சேவை இணையத்தளம் ஊடாக அல்லது 1-888-2-DONATE ஐ அழைப்பதன் மூலம் பெற்று கொள்ள முடியும். அனைத்து மருத்துவ மனைகளிலும் சென்று நன்கொடைகளை வழங்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.