ஆகஸ்ட் வெள்ளத்தில் பல தெருக்கார்கள் சேதம்!

ரொறொன்ரோ போக்குவரத்து ஆணையம் இந்த மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற புயல் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆணையத்தின் புதிய தெருக்கார்களில் ஒன்பது பழுதடைந்துள்ளதாக உறுதிப்படுத்தி உள்ளது.
ஆகஸ்ட் 7ல் இரண்டு முதல் மூன்று மணித்தியாலங்களில் 50-75மில்லிமீற்றர்கள் வரையிலான மழைவீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நகரம் பூராகவும் வீதிகள் மற்றும் நிலக்கீழ் குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டன.
லிபர்ட்டி வில்லேஜ் அருகாமையில் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் இரண்டு கிங் வீதி தெருக்கார்கள் காணப்பட்டுள்ளன. இவை இரண்டின் உட்பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.