Canada

ஆசை காட்டிய ஆன்லைன் தோழி: இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி !!

ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த ஒரு இளைஞன் சமூக ஊடகம் ஒன்றில் கிடைத்த ஆன்லைன் தோழிக்கு கேட்டதெல்லாம் அனுப்பினான், தனது நிர்வாண புகைப்படங்கள் உட்பட. கடைசியில் தான் தோழி என்று நினைத்தது யார் என்ற உண்மை தெரியவந்தபோது அவனுக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது. தொடர்ந்து அந்த இளைஞனின் தோழி ஆபாசப் படங்களாகவே கேட்க அவனுக்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டது.

படங்களை அனுப்ப அவன் மறுக்கவே அவனது தோழி அவனை மிரட்ட ஆரம்பித்தாள். இதனால் அச்சமுற்ற அவன் பொலிசாரின் உதவியை நாடினான். அவனது போனில் உள்ள டேட்டாவின் உதவியால் தடயவியல் நிபுணர்கள் Rotterdamஇல் வசிக்கும் குற்றவாளியைத் தேடிச் சென்றபோது அனைவருக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு இருந்தது ஒரு இளம்பெண் அல்ல, 28 வயது ஆண் ஒருவர்.

அந்த நபரைக் கைது செய்த பொலிசார் சிறார் ஆபாச படங்கள் வைத்திருத்தல், தயாரித்தல், மற்றும் ஆபாச செயல்களை செய்ய சிறார்களை தூண்டுதல் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் அவன் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். அவனைக் கைது செய்து விசாரித்ததில் அவன் இன்னும் நான்கு சிறார்களை இதேபோல் ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top