Canada

இடைத் தேர்தல் குறித்த சர்ச்சைக்கு முடிவுகட்டினார் ட்ரூடோ .

கனடாவில் இடைத் தேர்தல் குறித்து பரவலாக எழுந்துவந்த சர்ச்சை கருத்துக்களுக்கு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ முடிவு கட்டியுள்ளார். நேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த ட்ரூடோ, இடைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் எமது திட்டத்தில் இல்லை. இனிமேலும் இருக்கப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த பிரதமர், எமது அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட வேண்டிய பல விடயங்கள் காணப்படுகின்றன.

நடுத்தர வர்க்கத்தினரை பலப்படுத்தல், நல்லிணக்கத்திற்கான பணிகளை தொடர்தல், அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் வலுவான பொருளாதார கட்டமைப்பை உருவாக்கல் போன்ற பல பணிகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார். இதேவேளை, முந்தைய கொன்சவேற்றிவ் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட நிலையான தேர்தல் திகதி சட்டத்திற்கு அமைய கனடாவில் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் 29ஆம் திகதியே தேர்தல் நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top