Canada

இது கனடா இல்லையா? கிழக்கு பகுதியில் வெப்ப அலைகள் மேற்கில் பனி!

கனடாவின் சில பகுதிகள் கோடை விடுமுறை முடிவிற்கு வரும் நிலையில் சில வெப்பமான வெப்பநிலையை இந்த வருடம் எதிர் கொள்கின்றனர். மற்ற பகுதிகளில் காலநிலை ஆகஸ்ட் இறுதி வாரத்தில் டிசம்பர் மாதத்திற்கு பொருத்தமான காலநிலையை கொண்டிருக்கின்றது. திங்கள்கிழமை காலை பிரிட்டிஷ் கொலம்பியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை பூச்சியத்திற்கு கீழே காணப்படுகின்றது.

பிரின்ஸ் ஜோர்ஜ் பகுதியில் அசாதாரண காலநிலை காணப்படுகின்றது. திங்கள்கிழமை பிரிட்டிஷ் கொலம்பியா-அல்பேர்ட்டா எல்லையை சுற்றியுள்ள பகுதிகளில் வெப்பநிலை ஒற்றை இலக்கங்களிற்கு குறைவாக காணப்படுகின்றது. ரொறொன்ரோ உட்பட்ட மொன்றியல் மற்றும் ஹமில்ரன் புதன்கிழமை வரை வெப்பநிலை 30 C ற்கும் மேலாக 40-சதவிகித ஈரப்பதமூட்டி வலுவுடன் கூடி காணப்படும் என கனடா சுற்று சூழல் எச்சரித்துள்ளது. சிறுவர்களை அதிக நீர் அருந்த செய்யுமாறும் வெப்பம் அதிகரித்த பகுதிகளை தவிர்க்குமாறும் அதிகாரிகள் பெற்றோர்களை எச்சரிக்கின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top