News

இத்தாலியில் நெடுஞ்சாலை மேம்பாலம் இடிந்த விபத்தில் 22 பேர் பலி, பல வாகனங்கள் சேதம்..

இத்தாலி நாட்டின் வடமேற்கில் மலைகள் சூழ்ந்த பகுதியில் ஜெனோவா நகரம் அமைந்துள்ளது. மலைகளுக்கு இடையில் கான்கிரீட் தூண்களை அமைத்து அவற்றின் மீது உருவாக்கப்பட்டுள்ள சாலைகள் வழியாகதான் இங்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இடையில் சில வாய்க்கால் மற்றும் கால்வாய் பாலங்களும் உள்ளன.

 

 

இந்நிலையில், ஜெனோவா நகரின் மேற்கில் பிரபல தொழிற்பேட்டை அருகே அமைந்துள்ள A10 நெடுஞ்சாலையில் இருக்கும் மோரான்டி என்னும் மேம்பாலத்தின் ஒருபகுதி இன்று அடித்த புயலில் மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில்  22 பேர் பலியானதோடு இன்னும் ஏராளமானோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

அந்த பாலத்தின் சுமார் 200 மீட்டர் நீளத்திலான பகுதி சுமார் 100 அடி ஆழத்தில் நொறுங்கி விழுந்ததால் அப்போது அவ்வழியாக சென்ற பல கார்கள் தூக்கி வீசப்பட்டு சில ஆற்றிலும் சில கட்டிடங்கள் மீதும் சில ரயில் பாதையிலும் சென்று விழுந்தன.சில கார்களும் லாரிகளும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றன.

 

இடிபாடுகளுக்கிடையே இன்னும் பலர் உயிருடன் சிக்கியிருக்கலாம் என்பதால் தீயணைப்பு வீரர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இடிபாடுகளுக்கிடையிலிருந்து இதுவரை இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டு ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த சோக சம்பவம் இத்தாலியையும் பிரான்சையும் பல சுற்றுலாஸ்தலங்களையும் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலையில் நடைபெற்றுள்ளது. இத்தாலிய விடுமுறை ஒன்று அடுத்து வருவதால் அந்த பாலத்தில் வழக்கத்தைவிட அதிக போக்குவரத்து இருந்திருக்கும் என கருதப்படுகிறது. –

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top