News

இத்தாலியில் விமான நிலையம் அருகே 2 லாரிகள் மோதல்: 2 பேர் பலி; 60 பேர் காயம்!!

இத்தாலி நாட்டின் பொலாக்னா விமான நிலையம் அருகே 2 லாரிகள் மோதி கொண்டதில் 2 பேர் பலியாகினர். 60 பேர் காயமடைந்தனர்.
இத்தாலி நாட்டின் பொலாக்னா விமான நிலையம் அருகே பாலம் ஒன்றின் மீது கார்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது. தீப்பற்ற கூடிய பொருட்களை ஏற்றி கொண்டு சென்ற டேங்கர் லாரியின் மீது அது மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் லாரிகள் வெடித்து சிதறியுள்ளன. இதனால் ஏற்பட்ட தீயானது வான்வரை பரவியது.

இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். 60 பேர் காயமடைந்தனர். இந்த மோதலால் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. லாரிகள் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தீயானது பாலத்தின் கீழ் இருந்த கார் நிறுத்தும் இடத்திற்கும் பரவியது. இதில் அங்கிருந்த பல்வேறு வாகனங்களும் தீப்பிடித்து கொண்டு வெடித்து சிதறியுள்ளன.

தொடர்ந்து தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்களும் மற்றும் ஆம்புலன்சுகளும் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

லாரிகள் மோதி வெடித்து சிதறியபின் கார் நிறுத்தும் இடத்தில் பரவிய தீயில் ஒருவர் சிக்கி கொண்டது பற்றிய காட்சியும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top