இயேசு வருகிறார் என கத்திக்கொண்டே ஒரு வயது குழந்தையை துடிதுடிக்க அறுத்துக்கொன்ற தந்தை !

அமெரிக்காவில் தனது 1 வயது குழந்தையை கத்தியால் துடிதுடிக்க அறுத்து கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். டெக்ஸாஸ் மாநிலத்தில் Oak Forrest என்ற குடியிருப்பில் வசித்து வந்த தந்தை சுமார் 12.30 மணியளவில் கத்தியை எடுத்து தனது குழந்தையின், கழுத்தினை துடிதுடிக்க அறுத்துள்ளார்.
இவர் குழந்தையின் கழுத்தினை அறுக்கும்போது, இயேசு வருகிறார் என உரக்க கத்தியுள்ளார், இப்படி ஒரு சத்தத்தை கேட்டவுடன் அருகில் வசிப்பவர் துப்பாக்கியுடன் ஓடி வந்துள்ளார். அவர் வந்து பார்க்கையில், குழந்தை ரத்த வெள்ளத்தில் கிடக்க அந்நபர் விடாமல் குழந்தையை கத்தியால் அறுத்துக்கொண்டே இருந்துள்ளார்.
>இதனால் பக்கத்து வீட்டு நபர் தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அந்நபரின் காலில் சுட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவம் இடத்திற்கு வந்த பொலிசார் அந்நபரை கைது செய்துள்ளனர்.
மேலும், அக்குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது. தனது வாழ்நாளில் இப்படி ஒரு மோசமான சம்பவத்தை நேரில் பார்த்ததில்லை என கைது செய்த பொலிஸ் தெரிவித்துள்ளார்.