இரண்டு ரயில்கள் விபத்துக்குள்ளானது : 25 பேர் வைத்தியசாலையில்..

பொல்காவலை ரயில்நிலையத்தின் பனலிய பிரதேசத்திற்கு அருகில்ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் ஒன்று, இயந்திர கோளாறு காரணமாக பொல்காவலை ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் பின்னர் மாலை 4.50 மணியளவில் கொழும்பில் இருந்து ரம்புக்கணை நோக்கி பயணித்த மற்றுமொரு ரயிலானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலுடன் மோதியது.
குறித்த விபத்தில் காயமடைந்த 25 பேர் தற்போது பொல்காவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.