ஈராக்கில் வான்தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் 15 பேர் பலி!

ஈராக் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 15 பேர் உயிரிழந்தனர்.
ஈராக் நாட்டில் பல இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இன்னும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு சலாகுதீன் மாகாணத்தில் அவர்களை குறிவைத்து நேற்று முன்தினம் கடுமையான வான்தாக்குதல்கள் நடைபெற்றன. இந்த தாக்குதல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 15 பேர் பலியாகினர்.
இது குறித்து ஈராக் ராணுவ உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் ஹமீத் அல் மாலிகி கூறுகையில், “ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறி வைத்து சலாகுதீன் மாகாணத்தில் வான்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் அவர்களது ஓய்வு இல்லங்கள் அழிக்கப்பட்டன. அவர்களின் ஆயுதங்களும் நாசமாக்கப்பட்டன. 15 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்” என்று குறிப்பிட்டார்.
இந்த உயிர்ப்பலி, சலாகுதீன் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.